சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி கண்ணாடி டம்ளர் மீது அமர்ந்து பல்வேறு யோகாசெய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் கோவில்பட்டி எடுஸ்டார் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ரவீணா(5) ஈடுபட்டார்.
இதனை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால்,வழக்கறிஞர்கள் கருப்பசாமி, ஸ்ரீதரன், முனீஸ்வரன் மற்றும் மாணவி ரவீணாவின் பெற்றோர்களான விஜயன் - ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.