தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்பம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சொல்கின்ற கருத்துகள் தான் எங்களுடைய கருத்து. சசிகலா அதிமுகவில் தற்பொழுது இல்லை, தேர்தல் நேரத்தில் கூட சசிகலா அதிமுகவிற்கு சாதகமாக இல்லை.
அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 30 நாள்களில் விமர்சனம் செய்வது சரியான எதிர்க்கட்சிக்கு அடையாளமாக இருக்காது. தமிழ்நாடு எல்லா துறையிலும் பின்னோக்கி இருந்ததாக திமுக தெரிவித்து இருந்தது. புள்ளி விவரத்தின் படி பள்ளிக்கல்வித்துறை தரவரிசைப்படி A++ என்ற இடத்தினை பெற்று தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற இலக்கினை அடைந்துள்ளது.
இது திமுகவின் சாதனை கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உழைப்பே காரணம். மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் அனைத்து எதிர்கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதை நாங்கள் வரவேற்பதாகவும் கடம்பூர் ராஜூகூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை