தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கனவே, கரோனா பாதிப்பு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி தடைகாலம் நிறைவடையும் நிலையிலும், கரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருப்பதால் விசைப்படகுகள் தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வது தற்போதும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு இதனைக் கவனத்தில் கொண்டு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு: வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு!