ETV Bharat / state

நிறைவடைந்த மீன்பிடி தடை காலம்.. மகிழ்ச்சியாக  கடலுக்கு சென்ற மீனவர்கள்...

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வானவேடிக்கையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மகிழ்ச்சியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்...

author img

By

Published : Jun 15, 2022, 9:35 AM IST

Updated : Jun 15, 2022, 9:56 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் நேற்றுடன் (ஜூன்.14) நிறைவு அடைந்தது. கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் மீன்படிக்க செல்லக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மகிழ்ச்சியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்...
நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மகிழ்ச்சியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்...

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்திலும் விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 262 விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்குச் சுழற்சி முறையில் 130 பேர் மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்கின்றனர். அனைவருக்கும் மீன் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 130 விசைப்படகுகள் இன்றும் 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்ல முடிவு செய்ததின் அடிப்படையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

இதுகுறித்து மீனவர் சுஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை காலத்திற்கு முன்பாக இரண்டு மாதங்களாக மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தொழிலுக்கு செல்வதாக குறிப்பிட்டார். அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சந்தோசமாகக் கடலுக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

முதல் நாளான இன்று விசைப்படகு கடலுக்கு செல்வதை வரவேற்கும் வகையில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் மீனவர்கள் வானவேடிக்கை நடத்தினர்.

இதையும் படிங்க: மீன்களை வெட்டிக் கழுவும் வேலை செய்து மகளை மருத்துவராக்கிய வீரத்தாய் - சிறப்புத் தொகுப்பு!

Last Updated : Jun 15, 2022, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.