தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி பகுதியிலுள்ள காளிராஜ் என்பவரது கட்டடத்தில், சாத்தூரைச் சேர்ந்த மாதவன் என்பவர் அட்டை கம்பெனி நடத்தப்போவதாகக் கூறி வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் அக்கட்டடத்தில் வெடிபொருட்கள் தயாரித்து வருவதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு, ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அக்கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்ட தாசில்தார் தலைமையிலான குழுவினர், அங்கு பேன்சி வெடிகள் தயாரிப்பு நடைபெற்று வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் குழுவினர் ஆய்வு மேற்கொள்வதையறிந்த, கம்பெனி உரிமையாளர் மாதவன் உட்பட மேலும் இரு தொழிலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பின் அங்கு வேலை செய்துவந்த சாத்தூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், டேனியல் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி காவல்துறையினர், ஆலையிலிருந்த 200 கிலோ பட்டாசு மூலப்பொருட்களை கைப்பற்றியும், தப்பி ஓடிய நிறுவன உரிமையாளர் மாதவன் உள்ளிட்ட மூன்று பேரை வலைவீசித் தேடியும் வருகின்றனர்.
இதையும் படிங்க:திடீரென எரிந்த தனியார் பேருந்து: நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த பயணிகள்