ETV Bharat / state

தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு! - Petition against new electricity project

தூத்துக்குடி: மத்திய அரசின் புதிய மின்சாரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கக் கோரி விவசாயிகள் மனு!

author img

By

Published : May 28, 2020, 4:17 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, ”விவசாயிகளுக்குத் தொடர்ந்து கட்டணமில்லா உரிமை மின்சாரம் வழங்க வேண்டும். 1 ஹெச்.பி.க்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற புதிய மின்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். விவசாயி ஒருவர் 3 ஹெச்பி வைத்து உபயோகித்து வந்தால் வருடத்திற்கு அவர் ரூ.60 ஆயிரம் செலுத்தினால்தான் விவசாயம் செய்ய முடியும்.

இதனால் மத்திய அரசு கொண்டுவரும் புதிய மின்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது. ஏற்கனவே, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இடுபொருள்களின் விலை அதிகமாக உள்ளது. கூலியும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி விவசாயிகளை நோகடிக்க வேண்டாம். இதற்கு தமிழ்நாடு அரசு உடந்தையாகக் கூடாது. விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ’இவன் இன்னும் உயிரோட இருக்கானா?’ - இறந்தவர் சுவாசித்ததால் வந்த குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.