ETV Bharat / state

தூத்துக்குடி மாவட்ட பேரவைத் தொகுதிகளில் எத்தனை விழுக்காடு? - வாக்கு இயந்திரங்களுக்கு சீல்

தூத்துக்குடி: அதிகபட்சமாக விளாத்திக்குளத்தில் 76.43 விழுக்காடு வாக்குகளும், தூத்துக்குடியில் 69.84 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

evm
evm
author img

By

Published : Apr 7, 2021, 6:52 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 76.43 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்வைப்பு

கோவில்பட்டியில் 67.42 விழுக்காடு வாக்குகளும், ஓட்டப்பிடாரத்தில் 69.82 விழுக்காடு வாக்குகளும், தூத்துக்குடியில் 65.04 விழுக்காடு வாக்குகளும், திருச்செந்தூரில் 69.96 விழுக்காடு வாக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 72.34 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவுக்கான நேரத்திற்குப் பின் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றுக்கு சீல்வைத்து பாதுகாப்புப் பெட்டியில் அடைத்தனர்.

பின்னர் அவை மண்டலத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையின்கீழ் தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.