ETV Bharat / state

தூத்துக்குடி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

தூத்துக்குடி: காயல்பட்டினம் கடற்கரையில் சிறிய அளவிலான டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

dolphin die on kayalpattinam beach
author img

By

Published : Oct 2, 2019, 8:35 AM IST

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கும், மன்னார்வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு குழுவினர், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை மீட்டு கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் அளவில் சிறியதாகும். இது பொதுவாக ஆழ்கடல் பகுதியில் வசிக்கக் கூடியது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு போன்ற ஏதேனும் ஒன்றில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இறந்து கரை ஒதுங்கிய 150க்கும் அதிகமான டால்பின்கள் - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

Intro:தூத்துக்குடி காயல்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இழந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக குழுவினர் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை மீட்டு கடற்கரை அருகே குழித்தோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் அளவில் சிறியதாகும். இது பொதுவாக ஆழ்கடல் பகுதியில் வசிக்கக் கூடியது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் விசைப்படகின் போன்ற ஏதேனும் ஒன்றில் புரெப்பலர் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் அது இறந்து கரை ஒதுங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.