தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேவுள்ள தெற்கு வண்டணம், குமாரபுரம் (எ) கலிங்கப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் வழங்கும் பணியை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறியிருக்கலாம். ஏனெனில், கடந்த 2011ஆம் ஆண்டு, எங்கள் அணியில் இணைந்து தேமுதிக எதிர்க்கட்சியானது. அதைப் போன்று தற்போது எங்கள் அணியிலுள்ள பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.
திமுகவில் நடப்பது குடும்ப அரசியல். ஏற்கனவே, 2011ஆம் ஆண்டு திமுகவின் குடும்ப அரசியலை முன்னிறுத்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மேலும் மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. கனிமொழியும் மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
ஆகையால்தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதியை, மு.க.ஸ்டாலின் முன்நிறுத்தி வருகிறார். இதனால் வி.பி.துரைசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் போன்றோர் திமுகவிலிருந்து வெளியேறி பாஜக சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்கா; எஸ்.வி.சேகர் மீது தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு