திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள அச்சுதமங்களம் கிராமத்தில் எதிரெதிர் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சியினர் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து பொதுமக்களுக்குக் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நன்னிலம் -கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் பணி நிமித்தமாகப் பயணித்து வரும் பொதுமக்கள், கரோனா முன் தடுப்புக் களப்பணியிலுள்ள, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்ற கரோனா பாதுகாப்பு தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், சாலையில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களிடம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.