ETV Bharat / state

'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும்'

author img

By

Published : Jul 20, 2020, 3:12 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆலையை மீண்டும் திறந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்ப்பாளர் குழு எச்சரித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிப்புப் பணிகளுக்காகத் திறக்க அனுமதிக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 17ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் குழு இன்று ( ஜூலை 20) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன்பின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசப் பயங்கரவாதம் காரணமாக 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு இழுத்து மூடியது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக வாத, பிரதிவாதங்கள் நிறைவுற்று தற்போது தீர்ப்பு வரவுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை அரசு உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆலையில் உள்ள கழிவுகள் அனைத்தும் 99 விழுக்காடு அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதால், யாரும் பயம் கொள்ள வேண்டாம் என்றார். அப்படி இருக்கையில் என்ன பராமரிப்புப் பணிக்காகத் தற்போது ஆலையைத் திறக்க நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை மக்களை ஏமாற்றி நயவஞ்சக முறையில் மீண்டும் தூத்துக்குடியில் கால் பதிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கு உறுதுணையாக சில அதிமுக, திமுக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த நபர்களும் மனு அளித்துள்ளதாக தகவல் அறிந்தோம்.

அரசாணை பிறப்பித்து இழுத்து மூடப்பட்டுள்ள ஒரு ஆலைக்கு ஆதரவாக உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு அளிப்பது என்பது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

இதேபோல மத்திய சுற்றுச்சூழல் கண்காணிப்பகத்தின் ஆய்வுக் குழு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில், தொழிற்சாலை அமைந்திருக்கவே கூடாது என்ற ஒரு பரிந்துரையையும் அனுப்பியுள்ளனர். ஆகவே, இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை மீண்டும் வெடிக்கச் செய்யும்.

எனவே தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் இதைக் கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.