தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளம்புவனம், பாண்டவர் மங்கலம் ஊராட்சி, ராஜிவ் நகர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, அங்குள்ள பயணியர் விடுதியில் குடிநீர் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாட்டில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கினால், அங்கு ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றக்கூடிய நிலை ஏற்படும். இதனால் சுய ஊரடங்கு முடிவடையும் மே 17ஆம் தேதிக்கு பின்னர் அது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு