ETV Bharat / state

Jai Bhim Controversy: சூர்யாவை உதைப்பதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு போராடலாம்: சி.பி.எம் வாசுகி

author img

By

Published : Nov 20, 2021, 7:55 PM IST

நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பதை விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆக்கப்பூர்வ விஷயங்களுக்குப் போராட முன்வர வேண்டும் என சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு போராடலாம்
ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு போராடலாம்

தூத்துக்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு இன்று (நவ.20) தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்திருப்பதை முறையாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதிகளவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை தொடர வேண்டும்.

ஆக்கப்பூர்வ விஷயங்களுக்குப் போராடலாம்

பெட்ரோல் விலையை குறைப்பதற்காக கூடுதலாக வசூல் செய்யும் கலால் வரி, செஸ் வரி ஆகியவற்றை உடனடியாக குறைக்க வேண்டும்.

கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆக்கப்பூர்வ விஷயங்களுக்குப் போராடலாம்

ஜெய்பீம் (Jai bhim Movie) பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த பாமக நிர்வாகி மற்றும் நடிகர் விஜய் சேதுபதியை தாக்குபவர்களுக்கு பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத் போன்றோரின் செயல்கள் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தரங்கெட்ட அரசியல் இருக்கக்கூடாது. மக்கள் இவ்வாறான தரங்கெட்ட அரசியலை நிராகரிக்க வேண்டும்.

சூர்யாவை எட்டி உதைப்பதை விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆக்கப்பூர்வ விஷயங்களுக்குப் போராட முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக விவசாய கிடங்குகளை அமைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்குவதற்கு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வரவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: School Leave: தொடர் மழை - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.