ETV Bharat / state

’தலையாட்டி பொம்மை அதிமுக அரசின் இலவசங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை’ - பிருந்தா காரத் பிரத்யேக நேர்காணல்

”அம்பானி, அதானி போன்ற குழுமங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன் தள்ளுபடி செய்ததுதான் இந்த அரசாங்கம் கொடுத்த மிகப்பெரிய இலவசம். மாறாக அதிமுக கொடுக்கும் இலவசங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் குழு மூத்த உறுப்பினர் பிருந்தா காரத்,

author img

By

Published : Mar 30, 2021, 8:35 AM IST

cpim national leader brinda karat
பிருந்தா காரத் பிரத்யேக் பேட்டி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் களத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டி தொகுதியில் பல்முனைப் போட்டி நிலவும் நிலையில், அத்தொகுதி தமிழ்நாட்டின் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி தொகுதியில் களம் காண்கிறார். திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

இவர்கள் தவிர மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள், பிறமாநிலக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

cpim national leader brinda karat
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து பிருந்தா காரத் பரப்புரை

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீனிவாசன், அரசியலில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் முதன்முறையாக தேர்தலில் களம் காண்கிறார். இதையடுத்து அவரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் குழு மூத்த உறுப்பினர் பிருந்தா காரத் கோவில்பட்டிக்கு வந்தார். அப்போது, ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியவற்றைக் காணலாம்.

கேள்வி: கோவில்பட்டி தொகுதியில் அதிமுக, அமமுக என இரு பெரும் கூட்டணிகளை எதிர்த்து சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது. இதனால் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள கடம்பூர் ராஜூ, மக்களை ஒருநாளும் சந்தித்தது இல்லை. 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்துகொண்டு இந்தத் தொகுதியில் மக்களின் கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

இங்கே போட்டியிடும் மற்றொரு மனிதரோ ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து ஓடி வந்து இங்கே போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றபின் அவர் ஒருநாளும் அங்குள்ள மக்களைச் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டு, அதை சட்டப்பேரவையில் தன் குரலாக ஒலிக்கச் செய்தது கிடையாது.

தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதேசமயம் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே கோவில்பட்டி தொகுதியில் கம்யூனிஸ்டுகள் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் சீனிவாசன் நிச்சயம் வெற்றி பெறுவார்.

ஏனென்றால், சீனிவாசன் பொதுமக்களுக்காக பொதுத்தளத்தில் முன் நின்றது மட்டுமில்லாமல், தொழிலாளர்களோடு தொழிலாளியாக இருந்திருக்கிறார். விவசாயத்துக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அவர், இங்கே இருக்கும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தற்போது தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத் தொகை கிடைக்கவில்லை. இதனால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலப் பொருள்களின் விலையேற்றம் என எண்ணற்ற பிரச்னைகள் கோவில்பட்டி தொகுதியில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண சீனிவாசன் நிச்சயம் முயற்சி எடுப்பார். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. இவை எங்கள் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றியை தேடித் தரும்.

திமுக தேர்தல் அறிக்கையை நாங்கள் முழு மனதோடு வரவேற்பதுடன், அதுவே எங்களுக்கு வெற்றியைத் தேடி தரும்

கேள்வி: தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் அளவுக்கு, சாதி ரீதியான பிரிவுகளும் இங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கு கடினமான போட்டி நிலவும் என நினைக்கிறீர்களா?

பதில்: வாக்காளர்கள் சாதி ரீதியாக, சமூக ரீதியாக வேட்பாளர்களை இனங்கண்டு வாக்களிப்பார்கள் என்பது முற்றிலும் தவறான கண்ணோட்டம். ஏனெனில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மக்களை சமுகம், சாதி, மதம் எனப் பிரித்து துண்டாட நினைப்பவர்கள். இதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக இங்குள்ள அதிமுக அரசு விளங்கிக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் சுய உரிமைகளை மோடி மற்றும் அமித்ஷா இருவரது கால்களின் ஆறு அடி ஆழத்துக்கும் கீழ் அதிமுக அரசு புதைத்து விட்டது. இவர்கள் இருவரும் இரட்டை ரயில் இன்ஜின்கள் போல் தமிழ்நாட்டின் கலாச்சாரம், மாநில உரிமை, பண்பாடு, மொழி ஆகியவற்றை சிதைத்து கொண்டிருக்கின்றனர்.

கோவில்பட்டி தொகுதி மக்கள் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகின்றனர். பாதுகாப்பான உயிர்ச்சூழல் சுற்றுச்சூழலை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் எங்கே சென்றது?

பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோர் முஸ்லிம்களின் குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்தனர். இங்கு நடந்த சம்பவத்துக்கும் முஸ்லிம்களின் குடியுரிமை பிரச்னைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

இது ஒரு வெட்கக்கேடான விஷயம். பாஜகவுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என யாரையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றனர்.

எப்படி டெல்லியில் போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக மோடி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறதோ, அதேபோன்று தான் தற்போது மக்களின் நிலைமையும் இருந்து வருகிறது. டெல்லியின் எல்லையை அந்நிய நாட்டு எல்லை போல் ஆக்கியுள்ளனர்.

எனவே தமிழ்நாட்டு மக்கள் இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தல் மூலமாக அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் இந்தத் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும்.

ஒற்றுமையாக இருக்க விரும்பும் கோவில்பட்டி பகுதி மக்கள்

கேள்வி: திமுக - அதிமுக என இரு திராவிடக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளார்கள். இவை தேர்தல் வெற்றிக்கு வழி வகுக்குமா?

பொது மக்களுக்கு இலவசங்கள் மூலம் அதிமுக வாக்குறுதி அளிப்பதற்கு என்ன தகுதி உள்ளது? இன்றைக்கு தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை நிலை இரண்டு மடங்காக உள்ளது. 2.3 சதவிகிதத்தில் இருந்து 4.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

எந்வொரு தொழில் நிறுவனமும் இங்கு முதலீடு செய்ய வருவதில்லை. சுமார் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் தத்தளிக்கின்றன. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நிகழ்ந்துள்ளது. அதில் பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும் வழங்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர்களின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்.

மத்திய அரசு ஆண்டுக்கு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என உறுதி அளித்திருந்தது. ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் கரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

இன்றைக்கு நாட்டிலேயே உச்சபட்சமாக ஹரியானா மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் 26.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு சொன்ன அந்த வேலைவாய்ப்புகளை ஹரியானா மாநிலத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்குவார்களா என்று பார்க்கலாம்.

இலவசங்கள் என்ற வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது மிகவும் கொடூரமான வார்த்தை. இன்றைய நாட்டின் நிலைமையில் இலவசங்கள் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டு பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் ஆறு லட்சம் கோடி ரூபாயும், வங்கிகளில் பெற்ற கடனை செலுத்தாததால் வங்கிக் கடன் மற்றும் வாராக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்தது என மொத்தமாக 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மத்திய மோடி அரசாங்கம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளன.

’இலவசங்கள் என்ற வார்த்தை மீது எனக்கு நம்பிக்கை இல்லை’

இந்த பட்ஜெட்டுகளில் ஒரு ரூபாய்கூட விதவை பென்ஷன் திட்டத்துக்காகவோ, மூத்தக்குடி மக்களுக்கு வரிச்சலுகையோ, அங்கன்வாடி பணியாளர்களுக்கோ அளிக்கப்படவில்லை. எனவே நான் ஏற்கனவே சொன்னது போல மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 'பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.