ETV Bharat / state

அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகள்: நகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை - Curfew shops in Thoothukudi

கோவில்பட்டியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளை மூடி, கடைக்காரர்களை நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம்
ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம்
author img

By

Published : Jun 8, 2021, 5:25 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருவதால், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்சமயம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படாத கடைகள் திறந்துள்ளதாக நகராட்சி ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, நகராட்சி அலுவலர்கள் கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெரு, மெயின் ரோடு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட பாத்திரக் கடை, ஜவுளிக்கடை, ரீசார்ஜ் கடை, சலூன் கடை ஆகிய கடைகளுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்து கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதையும் படிங்க: ’தடுப்பூசி செலுத்திய பின்புதான் கடலுக்குள் செல்வோம்’ - ராமேஸ்வரம் மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.