தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில், காவலர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்திலும், அவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேறு ஒரு காவல் நிலையத்திலும் அரசு பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆண் காவலருக்கு கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவருக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார். காவலரின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதியானது. இதை தொடர்ந்து இரு காவலர்களும் பணியாற்றிய காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று (ஏப்.11) நடைபெற்றது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண் காவலர், கடந்த வாரம்தான் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் வெறிச்சோடிய மெரினா