ETV Bharat / state

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை  தீவிரம் - Corona infection

தூத்துக்குடி: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில், மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

corona prevention action in Thoothukudi district

author img

By

Published : Sep 2, 2020, 10:54 PM IST

தமிழ்நாடு அரசு இ-பாஸ் ரத்து, வணிகவளாகங்கள், பூங்கா, ஆலயங்கள், பொது போக்குவரத்து அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் போதிய பாதுகாப்புடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆகவும் தொற்று பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 11,475 ஆகவும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,478 ஆகவும் உள்ளது.

மேலும் தற்போது மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், தனிமை கண்காணிப்பு முகாம்களில் 883 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கரோனா தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாக பரிசோதனைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

அதேசமயம் நகரின் பல பகுதிகளிலும் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக முகக் கவசம் அணியாமல் வருகின்றவர்களை தடுத்து நிறுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.