ETV Bharat / state

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சென்று வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார். மேலும், வெளி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம், மருந்துக் கிடங்கு ஆகியவற்றில் ஆய்வுமேற்கொண்டு, முறையாக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் சோதனை செய்தார்.

கோவில் பட்டி மாவட்ட ஆட்சியர்
கோவில் பட்டி மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Feb 22, 2021, 10:15 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் சென்று, வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார். மேலும், வெளி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம், மருந்துக் கிடங்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து, முறையாக மருந்துகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் சோதனை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவுகளுக்குச் சென்று பார்வையிட்ட ஆட்சியர், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருந்து அறிக்கையை ஆய்வுசெய்து, நோயாளிகளிடமிருந்து நோய் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பின் சி.டி. ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், டயாலிசிஸ் அறை, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, அரசு மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து, இதய மருத்துவர் மாற்றுப்பணியில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து பணியாற்றுகிறார்.

அவர் எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 3 அல்ட்ராசோன் இயந்திரங்கள் உள்ளன. அதில், ஒன்றை எக்கோ கருவியாக மாற்றிப் பயன்படுத்தலாம். இந்த மூன்று அல்ட்ராசோன் கருவிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு, குடல் வால் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம்.

கிட்னியில் கல் இருந்தால் அதனை அறுவை சிகிச்சையின்றி அகற்றுவதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டுவருகிறது. இதற்குப் பயிற்சிபெற்ற மருத்துவர்களும் உள்ளனர். இந்த இயந்திரம் இன்னும் இரண்டு நாள்களில் செயல்பாட்டுக்கு வரும்" என்றார் அவர்.

இதையும் படிங்க:சென்னை கோட்டத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.