தூத்துக்குடி: திமுகவைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் கோயில்களுக்கு செல்வது கிடையாது.
இருப்பினும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கோயிலுக்கு செல்லும் வழக்கம் உடையவர்கள். ஆனால் இந்த வழிபாடுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல திருப்பணிகள் நடைபெற்று வருவதும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, இன்று (அக் 27) தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் சில மணி நேரம் தரிசனம் செய்தார்.
அப்போது கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோயிலில் செந்தாமரை சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: "கரன்சி நோட்டுகளில் கடவுள்கள் லட்சுமி-விநாயகர் உருவம் இருந்தால், நாடு செழிக்கும்" - கெஜ்ரிவால்!