ETV Bharat / state

'தூத்துக்குடி மக்கள் எதிர்பாராத திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பார்' - கரோனா குறித்த ஆய்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: கரோனா ஆய்வுப்பணிக்கு வரும் முதலமைச்சர் மக்கள் எதிர்பாராத பல திட்டங்களை அறிவிப்பார் எனத் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

kadambur raju
kadambur raju
author img

By

Published : Sep 19, 2020, 10:30 PM IST

கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 22ஆம் தேதி தூத்துக்குடி வர உள்ளார். அன்றைய தினம் புதிய திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். இதற்காக நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜு, "தூத்துக்குடியில் கடந்த பத்து ஆண்டுகளில் உடன்குடி அனல் மின்நிலைய திட்டம், 50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்காக தாமிரபரணி குடியிருப்பு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மக்கள் எதிர்பாராத திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பார்

இந்தத் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், இதனை முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நவீன கருவியை முதலமைச்சர் அர்ப்பணிக்க உள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் எதிர்பார்க்காத பல திட்டங்களை முதலைமைச்சர் அன்றைய தினம் அறிவிக்கவுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.