ETV Bharat / state

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்! - சிறிய மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் 2 பேர் காயமடைந்தனர்.

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்!

author img

By

Published : Oct 11, 2022, 6:06 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டமன்றத்தில் உள்ள வைப்பாரில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டு வண்டி போட்டியை தூத்துக்குடி மாவட்ட வீரர் விளையாட்டு கழகத் தலைவர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து பெரிய மாட்டு வண்டியில் மொத்தம் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. 14 கி.மீ. தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், முதல் பரிசு ரூ.50,000 வேலாங்குளம் கண்ணன், மாட்டு வண்டியும் இரண்டாம் பரிசு ரூ.40,000 ஜக்கம்மாள்புரம் செல்வம், மாட்டு வண்டியும் மூன்றாவது பரிசு ரூ.30,000 குமரெட்டியாபுரம் சௌந்தர் ஆகிய மாட்டு வண்டிகளும் பரிசு பெற்றன.

இதனைத்தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 21 ஜோடி மாட்டு வண்டி கலந்து கொண்டது. இதற்கு 10 கிலோ மீட்டர் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியில், முதல் பரிசு ரூ.30,000 விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் மாட்டு வண்டியும், இராண்டாவது பரிசு ரூ.20,000 எதனபட்டி ஆர்தலின் இயேசு மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு ரூ.15,000 செல்லச்சாமி ஈராச்சி மாட்டு வண்டியும் பெற்றது.

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்!

இந்த போட்டியை காண மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாட்டு வண்டி பந்தயம் வீரர்களுக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தின் போது மிளகு நத்தம் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மற்றும் மாட்டு வண்டியின் சாரதி வேகமாக ஓடிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு மாட்டு வண்டி அவர் மீது மோதி காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விளாத்திகுளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக சார்ந்த முடிவுகளை தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.