ETV Bharat / state

ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாத கனிமொழி, எப்படி தூத்துக்குடியை முன்னேற்றுவார்? -தமிழிசை - Dr. Ambedkar 128th birthday

துாத்துக்குடி:  டாக்டர் அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பாஜக வேட்பாளர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாதவர், எப்படி தூத்துக்குடியை முன்னேற்றுவார் என திமுக வேட்பாளர் கனிமொழியை விமர்சித்தார்.

Tamilisai press meet
author img

By

Published : Apr 14, 2019, 11:49 AM IST

டாக்டர் அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை, அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் பல சமுதாய அமைப்பினர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பு
இதில், பாஜக வேட்பாளர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் அம்பேத்கரின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக பண பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு புதிய செல்போன் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த செயலிக்கு "பீம் ஆப்" என பெயரிட்டார்.
அதேபோல் அரசியலமைப்புச் சட்ட புத்தகம்தான் எனது புனித நூல் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அதுபோல ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று பல திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியிருக்கிறார். கடந்தாண்டு அம்பேத்கரின் பிறந்தநாளை வருடம் முழுவதும் மத்திய அரசு கொண்டாடியது.
நேற்றைய தினம் பேய்குளம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்திருக்கும் கிராமமான வெங்கடேசபுரத்தில் அவர் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அந்த கிராமத்திற்கு கொடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாதவர், எப்படி தூத்துக்குடியை முன்னேற்றுவார்.
தமிழிசை எந்த தைரியத்தில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி எனது மண். நான் பிறந்து வளர்ந்த மண். இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன். கனிமொழி எந்த தைரியத்தில் இங்கு வந்து போட்டியிடுகிறார்? நேற்றைய தினம் திமுக ட்விட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள்.
தேர்தல் என்று வந்ததும் திமுகவின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது. இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும். நாங்கள் அப்படியல்ல. நாங்கள் எல்லோருக்கும் மரியாதை செய்து கொண்டிருக்கிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின், நாகரிகம் இல்லாமல் பேசிவருகிறார். காவலாளியை, களவாணி என்பதும், விவசாயியை, விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்துவருகிறார். அவர் எதுகை மோனையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏளனமாக பேசிவருகிறார். வேண்டுமானால், என்னுடன் எதுகை மோனையில் போட்டியிட்டு பேச சொல்லுங்கள்' என்றார்.

டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் புவனேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மற்றும் பல சமுதாய அமைப்பினர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர் அம்பேத்காரின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக பண பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு புதிய செல்போன் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த செயலிக்கு "பீம் ஆப்" என பெயரிட்டார்.
அதேபோல் அரசியலமைப்பு சட்ட புத்தகம் தான் எனது புனித நூல் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில்  பேசியிருக்கிறார். அதுபோல ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று பல திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியிருக்கிறார்.
கடந்த வருடம் அம்பேத்கரின் பிறந்தநாளை வருடம் முழுவதும் மத்திய அரசு கொண்டாடியது.

பிரதமரின் வருகைக்கு பிறகு மட்டுமல்ல, முதலில் நாங்கள் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறோம். நேற்றைய தினம் பேய்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்திருக்கும் கிராமமான வெங்கடேசபுரத்தில் அவர் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை எனவும், எந்தவித முன்னேற்றத்தையும் அந்த கிராமத்திற்கு கொடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாதவர், எப்படி தூத்துக்குடியை முன்னேறுவார்.

தமிழிசை எந்த தைரியத்தில்  தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி எனது மண். நான் பிறந்து வளர்ந்த மண்.
இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன். கனிமொழி எந்த தைரியத்தில் இங்கு வந்து போட்டியிடுகிறார்?.

நேற்றைய தினம் திமுக டுவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்று வந்ததும் திமுகவின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது.
இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும்.
நாங்கள் அப்படியல்ல. நாங்கள் எல்லோருக்கும் மரியாதை செய்து கொண்டிருக்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின், நாகரிகம் இல்லாமல் பேசிவருகிறார். காவலாளியை, களவாணி என்பதும், விவசாயியை, விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் எதுகை மோனையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஏளனமாக பேசி வருகிறார்.
வேண்டுமானால், என்னுடன் எதுகை மோனையில் போட்டியிட்டு பேச சொல்லுங்கள் என்றார்.

Visual in editing send through reporter app.

Byte send FTP.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.