தூத்துக்குடி தமிழக அரசின் திட்டமான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளில் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோழிகுஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கேட்டார் ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரபுரம், அச்சங்குளம், துரைச்சாமிபுரம், வெங்கடாசலபுரம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடைசெவல், சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களில் கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 91 லட்சம் மதிப்பிலான தார்சாலை, ஜெஜெஎம் வீடுகளுக்கு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோழி முட்டையில், பாம்பு குட்டி- அதிர்ச்சியில் பொதுமக்கள்!