ETV Bharat / state

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடக்கம் - திருச்செந்தூர்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா துவக்கம்

author img

By

Published : Jul 30, 2022, 10:49 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கோயில் இணை ஆணையா் ம.அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 17ஆம் தேதி புதன்கிழமை ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா துவக்கம்

தொடா்ந்து, காலை 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படும். மாலையில் அருள்மிகு அப்பா் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

ஆக. 21ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருவா். 22இல் ஆறாம் திருநாளில் காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும்.

ஆக. 23ஆம் தேதி ஏழாம் திருநாளில் அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப் பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார,தீபாராதனை நடைபெற்றதும், மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வருகிறாா்.

24இல் எட்டாம் திருநாளில் காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் வந்து சேருகிறாா்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 26ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். ஆவணித்திருவிழா கொடியேற்றம், ஏழாம் திருநாள் ஆகிய இரு தினங்கள் அதிகாலை 1 மணிக்கும், ஐந்தாம் திருநாளில் அதிகாலை 4 மணிக்கும் கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவும் வரும் ஆக. 6ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Video: இளநீர் குடிக்கும் திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.