ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு - ஆட்டோ ஓட்டுநர் படுகொலை - ஆட்டோ டிரைவர் படுகொலை

தூத்துக்குடி: திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ ஓட்டுநர் கொடூரமான முறையில் உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

thoothukudi
thoothukudi
author img

By

Published : Jul 22, 2020, 12:02 PM IST

தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (27). இவருடைய மனைவியின் சகோதரி கணவர் விக்னேஸ்வரன் (28) பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவிக்கும் பிரேம்குமாருக்குமிடையே ரகசிய தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய அண்ணியை கே.டி.சி. நகரில் உள்ள வீட்டிற்கு பிரேம்குமார் அழைத்து வந்துள்ளார்.

இதனையறிந்த விக்னேஷ்வரன் தனது நண்பர்கள் நான்கு பேருடன், பிரேம்குமாரை தேடி கே.டி.சி. நகருக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருவருக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேம்குமாரை வெட்டினார். இதில், சுதாகரித்துக்கொண்டவர் அங்கிருந்து தப்பி தெருக்களில் ஓட ஆரம்பித்தார். இருப்பினும் விக்னேஷ்வரனின் நண்பர்கள் பிரேம்குமாரை விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்தனர்.

இதனையடுத்து, விக்னேஸ்வரனும் அவருடைய நண்பர்களும் அங்கிருந்து தலைமறைவானார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள விக்னேஷ்வரன் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடனைத் திருப்பி செலுத்தாத பெருநிறுவனங்களின் பிணைகள் மீது வங்கிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.