ETV Bharat / state

காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் - army jawan died in accident at Kashmir

தூத்துக்குடி: கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழ்நதார்.

காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர்

author img

By

Published : Nov 19, 2020, 10:03 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (32). இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா (7), வைஷ்ணவி (4), பிரதீப் குமார் (1) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி, காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் பணியிலிருந்தார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பணிமனையில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த வாகன விபத்தில் கருப்பசாமி உயிரிழந்ததாக ராணுவ அலுவலர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கருப்பசாமியின் குடும்பத்தினர் மற்றும் திட்டங்குளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர்
காஷ்மீரில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர்

உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை அல்லது நாளை மறுதினம் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: தேசியக் கொடியை பார்த்து நாட்டின் பெயரை கூறும் சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.