ETV Bharat / state

'நான் தூத்துக்குடியில் போட்டியிட என்ன காரணம்..?' - கனிமொழி - தூத்துக்குடி

தூத்துக்குடி: "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதற்கு அனிதா ராதாகிருஷ்ணன்தான் முக்கிய காரணம்" என்று, கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

kanimozhi
author img

By

Published : Jun 1, 2019, 12:16 AM IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற் குழு கூட்டம் முத்தையா புரத்தில் உள்ள திமுக தெற்கு மாவட்ட கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய கனிமொழி, "நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் அனிதா ராதா கிருஷ்ணன்தான். ஏனெனில், தூத்துக்குடி தொகுதிக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டு கொண்டதன் பேரில் நான் போட்டியிட்டேன். இந்த நாட்டையே பெரிய சுனாமி தாக்கிய வேளையில் தமிழ்நாட்டில் திமுக அதற்கு பெரிய தடுப்பு சுவராக இருந்துள்ளது.

இங்கே போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் தோல்விக்கு பிறகு, மக்கள் எனக்கு வாக்களிக்காததற்கு வருத்தபடுவார்கள் என கூறி வருகிறார். உண்மையில் தேர்தல் முடிவுக்கு பின் நாம் தலை நிமிர்ந்துள்ளோம். நிச்சயமாக நான் தூத்துக்குடி மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். முடிந்தவரையில் நான் தூத்துக்குடியில் தான் இருப்பேன். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையோடு கட்சியினர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேர்தலின் மூலமாக கூட வரலாம்" என்றார்.

கனிமொழி

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற் கூட்டம் முத்தையா புரத்தில் உள்ள திமுக தெற்கு மாவட்ட கழகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் கனிமொழி எம்.பி. பேசுகையில்,
நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு என்ன காரணம் என தேர்தலுக்கு முன்னர் பலரும் என்னிடம் கேட்டனர். அதற்கான விடையை நான் தேர்தல் முடிவுக்கு பின்னர் சொல்லலாம் என்று இருந்தேன். ஆகவே, நான் இங்கு போட்டியிட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் அனிதா ராதா கிருஷ்ணன்.
ஏனெனில், தூத்துக்குடி
தொகுதிக்கு வந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டு கொண்டதன் பேரில் இங்கு நான் போட்டியிட்டேன். திமுக தொண்டர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் பொய்த்து போகாது என தேர்தல் மூலமாக நிரூபித்துள்ளனர்.

திமுக, மிக சிறப்பான வெற்றியை தூத்துக்குடி மற்றும் ஓட்டபிடாரத்தில் பெற்றுள்ளது.
தமிழகத்தில் இடைத்தேர்தலில் 13 இடத்திலும், 37 பாராளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது.

இந்த நாட்டையே பெரிய சுனாமி தாக்கிய வேளையில் தமிழகத்தில் திமுக அதற்கு பெரிய தடுப்பு சுவராக இருந்துள்ளது என்பதை மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
இங்கே போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் தேர்தலில்
தோல்விக்கு பிறகு, மக்கள் எனக்கு வாக்களிக்காததற்கு  வருத்தபடுவார்கள் என கூறி வருகிறார்.
உண்மையில் தேர்தல் முடிவுக்கு பின் நாம் தலை நிமிர்ந்துள்ளோம்.
திமுகவின் உரிமை குரலை யாராலும் ஒடுக்க முடியாது.
நிச்சயமாக நான் தூத்துக்குடி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்
முடிந்தவரையில் நான் தூத்துக்குடியில் தான் இருப்பேன்.
மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வகையில் செயல்படுவேன்.
மக்களின் நம்பிக்கையை பொய்யாக விட மாட்டேன்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையோடு செயல்பட வேண்டும்.
விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அது தேர்தலின் மூலமாக கூட வரலாம் என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை வெற்றி பெற செய்ய வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையாவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, நடிகர் உதயநிதி ஸ்டாலினை திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டுகோள் விடுப்பது என்பன உள்பட 4 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.