தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ளது சோரிஸ்புரம், இப்பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான, செல்லத்துரை-பரலோக மேரி தம்பதியரின் இரு மகள்களில் மூத்த மகள் தான் செல்சியா. கடந்த ஆண்டு கல்லுரி படிப்பை முடித்து விட்டு தற்போது தனியார் இ-கிட்ஸ் என்ற நிறுவனத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பித்து வருகிறார்.
இவர் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக எழுதி அசத்தி வருகிறார். ஒரு சொற்றொடரை ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சு பிசுராமல் மின்னல் வேகத்தில் எழுதி பார்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவரும் இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் 4 நிமிடம் 11 செகண்ட்டில் கலாம்மின் 10 பொன் மொழிகளை தலைகீழாக எழுதி கலாம் வெல்ட் ரெக்கார்ட்ஸ்ஸில் தேர்வாகியுள்ளார்.தனியார் நிறுவனத்தில் மழலையருக்கு வெளிநாடு வாழ் ஆங்கில சொற்றொடரை கற்பித்து வரும் இவர் கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம் பிடிப்பதே லட்சிய கனவு என்றுள்ளார்.
இதுகுறித்து, ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,"7-ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளியில் வைத்து தலைகீழாக எழுதி பார்த்து வந்தேன்.பின்னர், படிப்படியாக,கற்று தற்போது அதி வேகமாக எழுத கற்று கொண்டேன்.பின் கல்லுரியில் படிக்கும் போது ஒரு நாள் தலைகீழாக எழுதி கொண்டிருக்கையில் ஆசிரியர் நான் எழுதுவதை பார்த்தார். அப்போது என்ன என்று கேட்கையில் நான் தலைகீழாக எழுதி வந்தேன் என்று கூறிய போது வியந்தார்.
அப்போது உன்னிடம் திறமை உள்ளது ஆகவே சாதனை படைக்கலாம் என்றார்.அதன்படி, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்-க்கு எனது திறமை பற்றி கூறி 4நிமிடம் 11 செகண்ட்-ல் கலாம்-மின் 10 பொன் மொழிகளை தலைகீழாக எழுதி வீடியோ எடுத்து அனுப்பினேன்.அதில் பாராட்டு பெற்று சான்றிதழும் வாங்கியுள்ளேன்.தற்போது மழலையருக்கு அமெரிக்கன் ஸ்டைலில் ஆங்கிலம் கற்று கொடுத்து வருவதாக கூறிய அவர், அடுத்த இலக்கு கின்னஸ்-ஸில் இடம் பெற வேண்டும்" என்று கூறினார்.
ஏழ்மை நிலையிலும் படிக்க வைத்தோம்: இது குறித்து செல்சியாவின் தாயார் பரலோக மேரி கூறுகையில், சிறு வயது முதலே திறமையானவள் நடனம், பாடல் படிப்பு என்று அனைத்திலும் முதல் வகுப்பு தான்,ஏழ்மை நிலையிலும், இரு மகள்களையும், படிக்க வைத்தோம்.தற்போது தனியார் ஆங்கில பள்ளியில் மழலையருக்கு பாடம் கற்பித்து வருகிறார். ஆனால் திறமைகேற்ற வருமானம் இல்லை என்ற அவர், கின்னஸ்-ஸில் இடம் பிடிப்பதற்கு தயாராகி வருவதாக கூறினார்.மேலும், இவர் கடந்த வருடம் பி இ பட்டபடிப்பில் முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ISRO: நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தகவல்!