ETV Bharat / state

திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்.. தூத்துக்குடியில் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 7:39 PM IST

T Rajendar: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் டி.ராஜேந்தர் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது டி. ராஜேந்திரன் மயக்கம்!

தூத்துக்குடி: மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், இன்று (டிச.30) வந்தார்.

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாநகரில் உள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும்போது, கூட்ட நெரிசல் காரணமாக டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். பின்னர், உடனடியாக அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை மயக்கத்தில் இருந்து மீட்டு பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வந்துள்ளேன். நான் முன்பு டி.ஆர், இப்போது இறையடியார். நான் பெரிய உதவி பண்ணக்கூடிய பெரிய ஆள் அல்ல, ஆனால் சின்ன உதவி பண்ணக்கூடிய சிறிய ஆள். பூசிக்கொள்ளவில்லை அரசியல் சாயம், எனக்கு தேவையில்லை அரசியல். அரசியலை மறந்து வேறொரு வாழ்க்கை வாழ்கிறேன். எனது மகன் எஸ்.டி.ஆர் ரசிகர் மன்றம் மற்றும் டிஆர் மன்றம் சார்பில் இந்த உதவிகளை செய்து வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வந்தால்.. நிவாரண உதவி பெற்ற தென்மாவட்ட மக்கள் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.