ETV Bharat / state

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஆர்யா - Actor Arya celebrated his birthday

தூத்துக்குடி அருகே படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்கி உதவினார்.

Etv Bharat படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ஆர்யா

author img

By

Published : Dec 11, 2022, 10:13 PM IST

Updated : Dec 12, 2022, 8:10 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நடிகர் ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிரம் ஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, எட்டயபுரம், இளவேலங்கால், கடம்பூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், கீழ ஈராலில் உள்ள பருத்தி அரவை ஆலையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகர் ஆர்யாவின் 41ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அவரது பிறந்தநாளையொட்டி இளவேலங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகள் 10 பேருக்கு நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடிகர் ஆர்யா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். நிகழ்ச்சியில், நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன் கதாநாயகி சித்தி இதானி, இயக்குநர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேனியில் அஜித்துக்கு 6 அடி சிலை வைத்த ரசிகர்!

Last Updated : Dec 12, 2022, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.