தூத்துக்குடி: கிருஷ்ணராஜபுரம் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (39). திருமணமாகாத இவர் சென்ட்ரிங் தொழில் செய்துவந்தார். இவர் டிசம்பர் 1ஆம் தேதி பழைய கார் ஒன்றை வாங்கி ஓட்டிவந்துள்ளார். இவரின் கார் கடந்த இரண்டு நாள்களாக செல்வநாயகபுரம் மதுபான கடை அருகே நின்றுகொண்டிருந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நேற்று (டிசம்பர் 3) கார் அருகே சென்று பார்த்தபோது, முன் சீட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வடபாகம் காவலர்கள் கணேசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களைக் காயப்படுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது