தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் மத்திய பாகம் உதவி ஆய்வாளர் மீஹா, விஜயசங்கர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேவர்புரம் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்துள்ளதுனர்.
விசாரணையில், அவர் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்திரகாளி என்பதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததும் கண்டிபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பத்ரகாளியை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 73 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க...நாமக்கல்லில் கஞ்சா விற்ற 5 பேர் கைது; 30 கிலோ கஞ்சா பறிமுதல்!