ETV Bharat / state

கயத்தாறு அருகே பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது! - கயத்தாறு பட்டியலின சாதிக்கொடுமை சம்பவம்

பட்டியலினத்தைச் சேர்ந்தவரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

caste hindu booked in olaikulam atrocity
கயத்தாறு அருகே பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது
author img

By

Published : Oct 13, 2020, 3:31 PM IST

Updated : Oct 13, 2020, 3:39 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள ஓலைக்குளத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கு சொந்தமான ஒரு ஆடு, ஓலைக்குளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவசங்கு (60) என்பவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளுக்கு இடையே புகுந்துள்ளது.

இதனால் பால்ராஜ், சிவசங்கு ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவசங்கு தனது உறவினர்களுடன் சேர்ந்து பால்ராஜை அவதூறாக பேசினார். மேலும், அவரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதனை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிகண்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, தலைமைக் காவலர்கள் முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை பால்ராஜை மன்னிப்பு கேட்க வைத்தவர்களையும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டவர்களையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கு, அவரது மகன் சங்கிலிப் பாண்டி (19), மகள் உடையம்மாள் (33), பெரியமாரி (47), அவரது சகோதரர் வீரையா(42), பெரியமாரி மகன் மகேந்திரன் (20), சங்கிலி பாண்டி மகன் மகாராஜன் (24), கார்த்திக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் 7 பேரும் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கிடையே இன்று கயத்தாறு காவல் நிலையம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கயத்தாறு உள்ள ஓலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் பால்ராஜ், சிவசங்கு ஆகியோருக்கு இடையே ஆடு மேய்ப்பது ஏற்பட்ட தகராறில், பால்ராஜை காலில் விழவைத்து வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பால்ராஜ் கடந்த 11ஆம் தேதி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அன்றைய தினமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று, இந்த வழக்கில் தொடர்புடைய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் பால்ராஜுக்கும், சிவசங்கு தரப்புக்கும் இடையே ஆடு மேய்ப்பது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாய்த்தகராறு உருவாகி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பால்ராஜை வலுக்கட்டாயமாக காலில் விழ வைத்து அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். இது சட்டத்துக்குப் புறம்பான செயல். இதனை அனுமதிக்க முடியாது. பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் கைது செய்துள்ளோம். இந்த சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். ஓலைக்குளம் கிராமத்திலும், பால்ராஜுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் ஆகியோர் பால்ராஜ் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஓலைக்குளம் வன்கொடுமை - காவல் துறைக்கு கனிமொழி பாராட்டு

Last Updated : Oct 13, 2020, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.