ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநர் கொலை: 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல் துறை! - கொலை வழக்கில் ஆறு பேர் கைது

தூத்துக்குடி: ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் ஆறு குற்றவாளிகளை காவல் துறையினர் 24 மணிநேரத்தில் கைதுசெய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவல் துறை!
Auto driver murder case
author img

By

Published : Jul 23, 2020, 7:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லையில் உள்ள கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரேம்குமார் (27). இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடந்த ஜூலை 21ஆம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்த்தனர்.

இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, கொலைக்குற்றவாளிகளை கைது செய்ய தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்து கணேஷ், நம்பிராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலைசெய்யப்பட்ட பிரேம்குமாருக்கும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33) மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன், அவனது சகோதரர், கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33), அவரது சகோதரர் இசக்கி கணேஷ் (30), புதுக்கோட்டை அய்யனார் காலணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (30), ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (30), புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த லெட்சுமணன் (25), தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்த கருப்பசாமி (25) ஆகிய ஆறு பேரையும் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் ஆறு பேரை கைது செய்த தனிப்படை காவல் துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.