ETV Bharat / state

வ.உ.சி துறைமுகம் மீண்டும் ஒரு புதியசாதனை

author img

By

Published : Oct 29, 2022, 9:50 AM IST

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரேகப்பலில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து மீண்டும் ஒரு புதியசாதனை படைத்துள்ளது.

வ.உ.சி துறைமுகத்தில் ஒரே கப்பலில் 120 காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்து சாதனை

தூத்துக்குடி: இதுகுறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "7.10.2022 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 120 எண்ணிக்கையிலானகாற்றாலை இறகுகளை ஒரே கப்பலின் மூலம் இறக்குமதி செய்து மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை ஒரேகப்பலில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இறக்குமதி செய்தது குறிப்பிடதக்கது. இக்கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளைக் இரண்டு பெரியநகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. இக்கப்பலின் மூலம் கையாளப்பட்டகாற்றாலை இறகுகள் அனைத்தும் சரக்குகையாளுபவர்களின் பாதுகாப்பினையும் சரக்குகளின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டுகையாளப்பட்டது.

6.60 மீட்டர் மிதவைஆழம் கொண்ட MV.NAN FENG ZHI XING என்ற இக்கப்பல் 25.10.2022 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்து இக்கப்பலில் 120 காற்றாலை இறகுகள் (76.8 மீட்டர் நீளம்)கொண்டுவரப்பட்டு 44 மணிநேரத்தில் அனைத்துகாற்றாலை இறகுகளும் இறக்குமதி செய்யப்பட்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இக்காற்றாலை இறகுகளைசாங்ஷ(Changshu)துறைமுகத்திலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்டு இக்காற்றாலை இறகுகள் நம் நாட்டின் அனைத்து பகுதிகளில் இயங்கிவரும் காற்றாலை பண்ணைகளின் பயன்பாட்டிற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள்மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியில் பாராட்டதக்க சாதனைகளைக் நிறைவேற்றியுள்ளது. கடந்தநிதியாண்டில் 2906 காற்றாலை இறகுகளும் (2021-2022) இந்த நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரை 1598 காற்றாலை இறகுகளைகையாண்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் உதிரிபாகங்களை சேமித்துவைப்பதற்கு தேவையான இடவசதியும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதனால் எளிதானமுறையில் நீண்டகாற்றாலை இறகுகளை எடுத்து செல்லும் பிரத்தியோகலாரிகள் எளிதாகதுறை முகத்திற்குஉள்ள செல்வதற்கு வெளியே வருவதற்கும் ஏதுவாகஉள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் இணைப்பு நெடுஞ்சாலைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பினை வழங்குவதன் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் கையாளுவதில் ஒரு தனித்துவமான துறைமுகமாக விளங்குகிறது.

இந்த காற்றாலை இறகுகளை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் கையாண்டு இச்சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்களான Asian Shipping Agencies, தூத்துக்குடி , சரக்கு கையாளும் & டிரான்ஸ்போர்ட் முகவர்களை NTC Logistics(I)Private Limited மற்றும் ஏற்றுமதியார்கள் , துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும் புதைக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விரைவில் தூத்துக்குடியில் ரூ.131 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - அமைச்சர் கீதா ஜீவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.