ETV Bharat / state

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!

author img

By

Published : Nov 27, 2020, 8:15 PM IST

திருவாரூர்: கூத்தனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் இருசக்கர வாகன உயிரிழப்பு  திருவாரூர் பைக் பலி  திருவாரூரில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞர் உயிரிழப்பு  Thiruvarur Bike Accident Death  ThiruvarurTwo Wheeler Accident Death  Youth dies after two-wheeler collides with tree in Thiruvarur
Youth dies after two-wheeler collides with tree in Thiruvarur

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள கூத்தனூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). இவருக்கு தாய் தந்தை இல்லாததால் பாட்டி வீட்டில் தங்கி காரைக்காலில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை பாலாஜி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு வீடியோ கவரேஜ் செய்ய கேமரா பையுடன் தனது இருசக்கர வாகனத்தின் ஸ்டேண்ட் எடுக்காமல் கூத்தனூரிருந்து மருவஞ்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் ஸ்டேண்ட் தட்டி நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த பேரளம் காவல்துறையினர் உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக நன்னிலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வடபழனி அருகே கார் விபத்து: கல்லூரி மாணவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.