திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து சிறப்பு கண்காட்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கைவினை பொருட்கள், இயற்கை முறையிலான உணவுகளான ஊறுகாய், உரங்கள், புடவைகள், வீட்டு அலங்கார பொருள்கள் போன்றவை இடம்பெற்றன.
மேலும் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் வாழை மட்டை இலை , பாக்கு மட்டை இலை, ஒயர் கூடைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியில் மாவட்ட அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டதோடு அங்கிருந்த பொருள்களை வாங்கியும் சென்றனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளில் தார்ச்சாலை! - அசத்தும் மதுரை மகளிர்!