திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடுவூரிலுள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசையும் மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து இன்று திடீரென சாலையில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் அறுவடை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வலியுறுத்தினர்.
இது தொடர்பாக உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆட்சியரின் வீட்டின் முன் நெல் மூட்டைகளை கொட்டி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இப்போராட்டத்தினால் மன்னார்குடி தஞ்சை திருச்சி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்