ETV Bharat / state

ஆன்லைன்ஆப் மூலம் கடன்... வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச போட்டோ.. இளைஞர் தற்கொலை செய்த சோகம் - gang threatened by morphing photo into obscenity

Online Loan App Scam:ஆன்லைன் மூலமாக கடன் பெற்ற இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதால் மனம் உடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற நிலைமை வேறு எந்தப் பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என அவரது தாயார் கதறி அழுதது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 4:36 PM IST

ஆன்லைன்ஆப் மூலம் கடன்... வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச போட்டோஸ்.. இளைஞர் தற்கொலை செய்த சோகம்

திருவாரூர்: ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற இளைஞரிடம் மோசடியாக அதிக பணம் பெற்றதோடு, அந்த இளைஞரின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் இன்று (ஜூலை 26) தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆன்லைன் ஆப் மூலம் லோன் வழங்கியதாக கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஏரி வேலூர் ஊராட்சியைச் சேர்ந்த செல்லந்திடல் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்டாலின் - சாவித்திரி தம்பதியினர். விவசாயக்கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியநிலையில், இளைய மகன் ராஜேஷ்(27) பி.ஏ முடித்துவிட்டு கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரத்தில் மகளிர் குழு நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜேஷ் ஆன்லைன் செயலி (Online Loan App) மூலம் அடிக்கடி கடன் வாங்கி, அதனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராஜேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து தொலைபேசியில் மிரட்டல்: இதனைத்தொடர்ந்து அவர் உடலைக் கைப்பற்றிய வலங்கைமான் காவல்துறையினர் உடற்கூராய்வுக்குப் பின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக ராஜேஷுக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி தொந்தரவு: ராஜேஷ் கடந்த வருடம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.5000 கடன் பெற்றதாகவும், அதற்கு அந்நிறுவனம் ரூ.20 ஆயிரம் வரை கேட்டு மிரட்டியதாகவும் அதனை ராஜேஷ் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு பணத்தை செலுத்தக் கூறி, வாட்ஸ்அப் மூலம் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது புகைப்படத்தை ஆபாசாமாக சித்தரித்து, அதில் அவரது தொலைபேசி எண், பான் கார்டு போன்றவற்றை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும்; உடனடியாக பணத்தை செலுத்தும்படியும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

வேறு யாருக்கும் இந்நிலை ஏற்படக்கூடாது: இதுகுறித்து அவரது சகோதரி நிவேதா கூறுகையில், 'எனது தம்பி ஆன்லைன் மூலம் ரூ.5000 பணம் எடுத்திருப்பதாகவும்; அதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டி இருப்பதாகவும் பணத்தைக் கேட்டு இந்தியில் தவறாக அந்நிறுவனத்தினர் பேசுவதாகவும் என்னிடம் மட்டும் கூறினான். நான் எனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறினேன். ஆனால், வீட்டில் வந்து பார்த்த பிறகுதான் தவறாக அவனது புகைப்படத்தை சித்தரித்து அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதுபோன்று வேறு யாருக்கும் நடக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

ரூ.5000-க்காக தனது மகனை கொன்றுவிட்டார்கள்; தாயார் கண்ணீர்: இதுகுறித்து ராஜேஷின் அம்மா சாவித்திரி கூறுகையில், 'அன்றாடம் கூலி வேலை செய்து எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறோம். இது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ரூ.5000 பணத்திற்காக எனது மகனை கொன்றுவிட்டார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

அரசு நடவடிக்கை தேவை: ஆன்லைன் செயலி மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும், காவல்துறையினரும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் போதும் இது போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் காவல் துறையினர் நெருங்க முடிவதில்லை என்கிற தைரியமும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக அமைகின்றன. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸ் உதவியோடு காரில் கடத்திய பெற்றோர் - குமரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.