திருவாரூர்: திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இன்னும் இரண்டு நாள்கள் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடந்தால் பயிர்கள் முழுவதும் முளைக்கத்தொடங்கி விடும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, வேளாண்துறை அலுவலர்கள், பாதிக்கப்பட்டப் பகுதிகள் முழுவதையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!