மன்னார்குடி- பந்தலடி பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் 18 வயதுக்கு கீழுள்ள மூன்று சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக அரசு அலுவலர்களுக்கு தகவல் வந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார தஞ்சை இணை இயக்குனர் சித்தார்த்தன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கடைக்கு சென்றனர்.
அப்போது, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கதிரவன்(14), கவியரசன்(16), ஹரிகரன்(15) ஆகிய மூன்று சிறுவர்களை மீட்டு 1098 சைல்டு லைன் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மூவரும் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு வந்ததால் அவர்கள் படித்த பள்ளி நிர்வாகத்திடம் பேசி பள்ளியில் மீண்டும் அலுவலர்கள் சேர்த்துவிட்டனர்.
வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலைபார்த்த மூன்று குழந்தைத் தொழிலாளர்களை மீட்ட அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்தை சிறைப்பிடித்த அரசு அலுவலர்கள்