ETV Bharat / state

சிஏஏவுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Feb 24, 2020, 3:19 PM IST

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் சிஏஏவுக்கு எதிராக தவ்ஹித் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..! சிஏஏவுக்கு எதிராக தவ்ஹித் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..! தவ்ஹித் ஜமாத் Thiruvarur Thowheed Jamath protesting against CAA Thowheed Jamath protesting against CAA Tamil Nadu Thowheed Jamath
Thowheed Jamath protesting against CAA

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள அத்திக்கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் அத்திக்கடை கிளைத் தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் பா.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தக் கூடிய இத்தகைய கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு நாளும் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள் இந்த கறுப்புச் சட்டத்தை எங்களுடைய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளிக்கின்றனர். அது போல், தமிழ்நாடு அரசும் உடனடியாக இந்த கறுப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்கள் வெயிலில் சாலையில் நின்று போராடுவது அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக அல்ல. தங்களின் குடியுரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ளவேண்டும்" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்திக்கடை கிளைச் செயலாளர் முகமது பைசல், கிளைப் பொருளாளர் சலாவுதீன், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து கிளை நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் என சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஜெயலலிதா பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.