இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், அதன் தலைவர்கள் மற்றும் அக்கட்சி அலுவலகங்கள் தொடர்பாக சிலர் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தையும், விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணுவையும் சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பதிவிட்டு, அவதூறு பரப்பிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக அமைதியை சீர்குலைத்து, கலவரச் சூழலை உருவாக்கும் குற்றவாளிகளோடு கை கோர்த்து செயல்படும் தமிழ்நாடு அரசையும், காவல் துறையினரையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு: மா.கம்யூ., போராட்டம்