கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், உயர் தரமான சிகிச்சை அளிப்பதோடு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைப்படி கருணைத் தொகை 2 லட்சம் ரூபாயை வழங்கிடவேண்டும், நோய்த் தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அலுவலர்களும் உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்!