திருவாரூர்: மன்னார்குடி அருகே, பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். (45) பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2 நாள்களாக பாண்டியனை காணவில்லை என உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். நேற்று (ஜூலை 20) அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பாண்டியன் கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரவாக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், பாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூரய்விற்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு தண்ணி காட்டிய கைதி - மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்