தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா வைரஸ் பாதிப்புக்காக பொதுமக்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கக்கோரியிருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த நிதி உதவியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிவந்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் எரவாஞ்சேரி கீழத்தெருவில் வசித்து வருபவர்கள் நிசார் அகமது - சல்மா தம்பதியினர். இவர்களுக்கு சனா(7), சக்கின்(6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த 5 ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக குடவாசல் வட்டாட்சியர் பரஞ்சோதியை நேரில் சந்தித்து வழங்கினர். நாட்டின் மீது அக்கறை கொண்ட இச்சிறுவர்களின் செயல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பணி முடிந்து வீடு திரும்பிய மருத்துவர்கள் மீது காவலர்கள் தாக்குதல்!