திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருவலஞ்சுழி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீரமணி. இந்நிலையில், நேற்று அதிகாலை வீரமணியும் அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்பகுதி கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது.
இதனை அறிந்த வீரமணி உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் தப்பியோடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு வீட்டின் கூரை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இச்செயல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளைஞரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு!