திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (27), அபி (25). அண்ணன், தங்கையான இவர்கள் தங்களது உறவினர்களின் சடங்கு விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் ஒளிமதி கிராமத்திலிருந்து வடபாதி கிராமம் நோக்கி சென்றனர்.
அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று இவர்கள் மீது மோதியதில் ஆனந்த் , அபி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வருகையால் தூத்துக்குடி சீரிய நிலைக்கு செல்லும்' - கடம்பூர் ராஜு