திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை திறக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனை அறிந்த கிராம மக்களில் ஒரு தரப்பினர், மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 1) கோட்டூர் பகுதியில் அரசு மதுபானக் கடையை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருதரப்பு பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பெண்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் அரசு மதுபானக் கடை திறக்க புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் திறக்கப்படவில்லை. எனவே தொலைதூரத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஆண்கள் அனைவரும் சென்று மது அருந்துகின்றனர். இதனால் விபத்து நேரிடுகிறது. எனவே, விபத்தை தவிர்ப்பதற்காக இந்த மதுபானக் கடையை திறக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்