ETV Bharat / state

தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறதா 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்? - Food Minister R Kamaraj

திருவாரூர்: தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
author img

By

Published : Jun 20, 2020, 8:36 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ”தமிழ்நாட்டில் எங்கு நேரடி நெல் கொள்முதல் தேவையோ அங்கே உடனடியாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வருடம் 24 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை மீண்டும் நாங்கள்தான் முறியடிப்போம். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.

இருசக்கர வாகனங்கள் வழங்கும் காட்சி
இருசக்கர வாகனங்கள் வழங்கும் காட்சி

அடுத்த மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். ’ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் என்பது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: நாகை விசைப்படகு மீனவர்கள் நாளை மறுநாள் முதல் கடலுக்குச் செல்ல முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.